India

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் இதுவரை 17 பேர் பரிதாப பலி


சென்னை: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500 பேர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் காலத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் நோய் வருவது வழக்கமாக உள்ளது. இதனால், பருவமழை தொடங்கும்  நேரத்தில் நோய் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால்  மேற்கொள்ளப்படும்.

ஆனால், இந்த ஆண்டு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் முறையாக  நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி உள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டோர் அந்தந்த மாவட்ட தலைநகர, ஒன்றிய அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 இந்நிலையில், மண்டல அளவில் பருவமழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட மண்டலங்களில் பருவமழைக்கால நடவடிக்கைகளோடு, டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும் என்று தலைமை  செயலாளர் கடந்த வாரம் உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.


சென்னையில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பல பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் 7  வயதுடைய இரட்ைடக் குழந்தைகளான தக்‌ஷன், தீக்‌ஷா ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையில் நேற்று முன்தினம்  அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் நேற்று காலை உயிரிழந்தனர். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (13), புளியந்தோப்பைச் சேர்ந்த அஸ்லாம் (8), அம்பேத்கர்  நகரைச் சேர்ந்த மோகனா (36) ஆகியோரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதைத் தவிர்த்து காஞ்சிபுரம் கோனோரி குப்பத்தை சேர்ந்த உதயகுமார் (35) என்பவரும்  உயரிழந்துள்ளார். நேற்று மாலை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பிரின்ஸ் உதயசேகர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானார்.

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு ெதாடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை இருப்பாலை பகுதியைச் சேர்ந்த மீனாட்சி, அனுப்பாண்டி சேர்ந்த  வீரம்மாள், விழுப்புரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சுகன்யா, நாகர்கோவிலைச் சேர்ந்த திரேசா உள்ளிட்டோரும் இதுவரை டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் உயிரிழந்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இதுவரை டெங்கு காய்ச்சலால் 5 பேர், பன்றிக் காய்ச்சலால்  11 பேர்  உள்ளிட்ட 16 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

மே லும் ெடங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்க ேபார்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். அவர் பேட்டியளித்த பிறகுதான் ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பிரின்ஸ் உதயசேகர் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், வேலூர், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.2017ம் ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தில் 23 ஆயிரத்து 35 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 63 பேர் பலியானதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்திய அளவில் ெடங்கு காய்ச்சலால் அதிகம் பேர் இறந்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் இந்தாண்டு இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்  என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top