Canada

தென் அல்பேர்ட்டா பகுதி மக்களுக்கு உறை பனி எச்சரிக்கை: வானிலை அறிவிப்பு!

சுற்றுச்சூழல் கனடா அமைப்பு, அல்பேர்ட்டா பகுதி மக்களுக்கு உறை பனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு கொடுத்துள்ள அறிக்கையில் தென் அல்பேர்ட்டா பிராந்திய பகுதியில் சுமார் 20 சென்டி மீட்டர் உயரத்திற்கு பனிப் படரும் என தேசிய வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேவேளையில், உறை பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் வெப்பநிலை 0 பாகை செல்சியசையும் விட குறைவடையும் நிலை காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வெப்பநிலை வீழ்ச்சியானது பயிர்கள் மற்றும் தாவரங்களை பாதிப்படையச் செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top