Canada

நஞ்சு கலந்த போதை மருந்துகளை உபயோகித்த மூவர் உயிரிழப்பு !

ஓட்டாவாவில் நஞ்சு கலந்த போதை மருந்துகளை உபயோகித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில்,

சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டாவாவில் நஞ்சு கலந்த போதை மருந்துகளை உபயோகித்த மூவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டாவாவில் அமைந்துள்ள முன்னணி சமூக சேவைகள் அமைப்பு, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த மூன்று உயிரிழப்புக்களும் கடந்த வாரம் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ள இவ் அமைப்பு, சிகிச்சை பெறுவதற்கு முன்பே இவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லபட்ட போதே உயிரிழந்துள்ளனர்.

குறித்த போதை பொருட்கள் வீரியம் கூடியவை எனவும், இதுபோன்ற ஆபத்தான போதை பொருட்கள் ஓட்டாவாவை அண்டிய பகுதியிலேயே விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top