News

நேபாளம் – பஸ் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் இந்தியர் உட்பட 6 பேர் பலி, 36 பேர் காயம்!

நேபாளம் நாட்டின் நவல்பரசி மாவட்டத்தில் இன்று ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.  

 
நேபாளம் நாட்டின் முதலாம் மாகாணத்தில் உள்ள சன்சாரி மாவட்டத்திற்குட்பட்ட இட்டாஹரி நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் இன்று ஒரு பஸ் பைராஹாவா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மத்யா-பிந்து நகராட்சிக்கு உட்பட்ட சாலை வழியாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்,சாலையை விட்டு விலகிச்சென்று பக்கவாட்டில் உள்ள அருன் ஆற்றுக்குள் விழுந்தது.


இந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிதானந்தா யாதவ் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 36 பேர் பாரத்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top