பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு: கனேடி பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே உறுதி!

அமெரிக்க- மெக்சிகோ- வின் புதிய உடன்பாடு கருதி பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என, கனேடி பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கனேடிய பண்ணை விவசாயிகள், அமெரிக்க உற்பத்தியாளர்களிடம் 3.59 வீத சந்தையை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க- மெக்சிகோ- உடன் கனடா அமைப்பின் புதிய உடன்பாட்டினால் எதிர்பார்க்கப்படும் இழப்புகளுக்கு பண்ணை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், பண்ணை விவசாயிகள் எதிர்நோக்கும் இழப்புகள் தொடர்பாக துல்லியமாக கண்டறிந்து அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் சுட்டி காட்டியுள்ளார்.
