Canada

பாலியல் புகாருக்கு இனி ஆன்லைன் கருவி! எட்மன்டன் பொலிஸார் தகவல்

பாலியல் தாக்குதல் தொடர்பான புகார்களை இனி ஆன்லைன் கருவி மூலம் வழங்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எட்மன்டன் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த கருவியானது, வரும் 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.

கடந்த வருடம் எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற 14,117 சம்பவங்களில் 743 சம்பவங்கள் பாலியல் தாக்குதல்கள் நடந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சமூகத்திலும் இருப்பவர்களில் பாலியல் தாக்குதல்கள் தொடர்பில் 88 சதவீதத்திலிருந்து 95 சதவீதத்தினர் இன்னமும் இரகசியம் காத்து வருகின்றனர்.

இந்த தகவலை, எட்மன்டன் பொலிஸின் பாலியல் தாக்குதல் பிரிவு பணியாளர் கிறிஸ்டா பென்னி கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், உருவாக்கப்பட்ட இந்த கருவி மூலம் பாலியல் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றி புகார்களை மக்கள் எளிமையாக தெரிவிக்கலாம்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top