Canada

பிரம்டனில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!

பிரம்டன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது Baylor Drive மற்றும் Bramtrail Gate பகுதியில், நேற்று முன்தினம் மாலை 5.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அங்கு பொலிஸார் விரைந்தனர்.

அங்கே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 25 வயதுடைய ஆண் ஒருவர் காணப்பட்டதாகவும், வேறு எவரும் காயமடைந்ததாக முறைப்பாடுகள் இல்லை என்றும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களை இந்தச் சம்பவம் தொடர்பில் தேடிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், எனினும் அவர்கள் குறித்த அடையாளங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் CBXY 409 என்ற இலக்கத் தகட்டை உடைய வெள்ளி நிற silver Acura ரக வாகனம் ஒன்றை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பீல் பிராந்திய பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top