News

பிரம்ப்டன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, ஒன்டாரியோ மாகாணத்தின் பிரம்ப்டனின் அமைந்துள்ள மோவிஸ் வீதி மற்றும் ரே லாசன் புஃளிவார்ட் பகுதியிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) அரங்கேறியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்த 30-வயது மதிக்கதக்க பாதசாரி ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும், பாதசாரிக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்ட போதும், சிகிக்சை பலன்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விபத்து தொடர்புடைய சாரதி ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top