News

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தந்தை செய்த கொடூர செயல்! 240 ஆண்டுகள் சிறை தண்டனை !!

அமெரிக்காவில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக குழந்தையின் தந்தைக்கு 240 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் Waco பகுதியைச் சேர்ந்தவர் Patricio Medina(27). இவரது மனைவியான Lisa Montoya-வுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் தந்தை Patricio Medina மிகவும் மோசமாக குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் தெரியவந்ததால், கடந்த 2017-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் Patricio Medina-வுக்கு 240-ஆண்டுகள் சிறை தண்டனையும் $10,000 டொலர் அபராதம் செலுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 80 ஆண்டுகள் பரோலில் வெளியில் வரமுடியாத அளவிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் குழந்தையை அந்த நபர் அவ்வளவு மோசமாக, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு துஷ்பிரயோகம் செய்துள்ளான், அதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்த குழந்தைக்கு தற்போது 4 வயது எனவும் Texas மாகாணத்தின் McLennan County பகுதியில் ஒரு குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top