புதிய முதலமைச்சர் வேட்பாளரை களமிறக்குகின்றது கூட்டமைப்பு

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.
வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆளுநரின் கையில் இன்னமும் நிதி உள்ளது”- என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். எனினும், ஆளுனரின் கையில் இன்னமும் நிதி உள்ளது.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கருத்து மோதல் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது. இரண்டு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதனால் வடமாகாண முதலமைச்சர், தனித்து அல்லது புதிய கூட்டணி ஒன்றில் ஊடாக தேர்தலில் போட்டியிட கூடிய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.
மேலும், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டு வருவதுடன், ஒரு தரப்பு முதலமைச்சருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே, எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.