Canada

பொலிசாரின் அவசர எச்சரிக்கையை உதவியுடன் 14 வயது சிறுமி பத்திரமாக மீட்பு!

எட்மன்டன் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் குழந்தை கடத்தல் அவசர எச்சரிக்கையை உதவியுடன் பொலிஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, 106 அவென்யூ மற்றும் 84 தெரு பகுதியில் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தன்று, 14 வயதுடைய சிறுமியை கடத்துவதற்காக சுமார் 3 மணியளவில் பாடசாலைக்கு முன் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் வாகனத்தில் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலில் அடிப்படையில், குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சுமார் 4:45 குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து, குழந்தையை கடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்ட 47 வயதான மர்ம நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top