மகசின் சிறையிலும் 43 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமக்கு எதிரான விசாரணை நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரியே அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே அனுராதபுர சிறைச்சாலையில் 12 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.