News

மக்கள் வெள்ளத்தால் மூழ்கடித்த ஐ.தே.கவின் போராட்டம்!

சட்டவிரோதமான முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்று தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்றைய தினம் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

இன்று மதியம் 12 மணியளவில் அலரி மாளிகையின் பின்புறத்தில் ஆரம்பமான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் மாலை 3.40மணியளவில் நிறைவு பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மக்களை அழைத்தனர். தொடர்ந்தும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த இலட்சக்கணக்காண மக்கள் தொகையினர் அங்கு கூடியிருந்த நிலையில் ஜனநாயத்துடன், அரசாங்க பணியாளர்கள் எவருக்கும் எந்த இடையுறும் இன்றி ஆதரவாளர்கள் அனைவரும் வீடு செல்லுமாறு ஐக்கிய தேசிய முன்னணியினர் சார்பாக கேட்டுக் கொண்டனர்.

எனினும் இதன்போது உறையாற்றி அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பிரதிநிதிகளும் இதே நிலை நாட்டில் தொடர்ந்தால் மீண்டும் வரவும் மண்டும் வரவும் என இலட்சக்கணக்கிலான மக்கள் தொகையினருக்கு அழைப்பு விடுத்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top