News

மன்னார் புதைகுழியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளது. மழை பெய்கின்ற போதும் அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த மார்ச் மாதம் மன்னார் ச.தொ.ச வளாகத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டு 95 வது நாட்களாக மனித எச்சங்கள் அகழ்வுப் பணி நடைபெற்று வருகின்றது.

இது வரைக்கும் 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டதில் 191 எலும்புக்கூடுகள் குழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு இவைகள் பாதுகாப்பான முறையில் தொடர்ந்து மன்னார் நீதிமன்றில் வைக்கப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச தலைமையில் கொண்ட குழுவினர் இவ் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top