News

மாவீரர்களை நினைவு கூருவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது! – இராணுவ தளபதி

வடக்கில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவு கூருவது பிரச்சினைக்குரிய விடயமல்ல, ஆனால், விடுதலைப்புலிகளை நினைவு கூரும் வகையில், மாவீரர் தினமோ அல்லது பிறிதொரு தினமோ நடத்தப்படுமானால் அது தொடர்பாக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 69 வது வருட பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் ஜயசிறி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர் நீத்த தமிழ் மக்களுக்கான ஞாபகார்த்த நினைவுகள் அனுஸ்டிக்கப்படுமானால் அது தவறில்லை. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அஞ்சலி செலுத்தப்படுமானால் அது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் நாட்டில் முரண்பாடு ஏற்படக் கூடும். எனினும் இந்த செயற்பாடானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் இராணுவ தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top