Canada

மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்; மூன்று பேர் உயிரிழப்பு!

கனடிய மாகாண நோவ ஸ்கொஸ் சியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, நோவா ஸ்கொஸ்சி யாவில் ஆன்டிகோனிஷ் கவுண்டி பகுதியில் அமைந்துள்ள தாக்கர் வூட்ஸ் சமூகம் நெடுஞ்சாலை 104 -யில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் நிகந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த RCMP- பொலிஸார் ஒரே காரில்

உயிரிழந்த நிலையில், கிடந்த 67 மற்றும் 36 வயதான இரண்டு பெண்களை கண்டனர்.

இருப்பினும், மற்ற இரண்டு வாகனங்களில் காயங்களுடன் இருந்த மற்ற நபர்களை மீட்டு சிகிக்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 60-வயது நிறைந்த பெண்ணும் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, மற்ற இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top