மெக்சிகோவில் உள்ள மிகவும் மோசமான ”போபோகெட்டபேட்டில் எரிமலை” வெடித்து தீயை கக்கி இருக்கிறது.
இந்த எரிமலை 2004 ல் வெடித்தது சிதறாமல் லாவாவை மட்டும் வெளியே விட்டுவிட்டு சென்றது. அப்போதில் இருந்தே இந்த எரிமலை வெடித்துக் கொண்டு இருந்துள்ளது.

தற்போது நேற்று இந்த எரிமலை தீவிரமாக லாவாக்களை கக்கி இருக்கிறது.
இதன்போது ஆகாயம் முழுக்க சிறிய சிறிய தீ துகள்களுடனும் பெரிய புகையுடனும் லாவா குளம்புகள் அழுத்தம் காரணமாக அப்படியே மேலே நெருப்பு போல் சீறுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த எரிமலை லாவா குழப்புகளை வெளியே விடும் காட்சி வீடியோக வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது எரிமலையை சுற்றி 100 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள எல்லோரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த எரிமலை இன்னும் தீவிரமாக வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.