News

மெக்சிகோ தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து; ஒருவர் படுகாயம்!

மெக்சிகோவில் அமைந்துள்ள மதுசார தொழிற்சாலை ஒன்றின் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் படு காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது, மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகொ சிட்டியில் அமைந்துள்ள மதுசார தொழிற்சாலை நேற்று (திங்கட்கிழமை) மாலை நிகழ்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சூழ புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ, வான்வரை சுடர்விட்டு எரிந்ததாக பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தொழிற்சாலையிலுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இருப்பினும், குறித்த விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top