Canada

யோர்க் பல்கலைக்கழக பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

யோர்க் பல்கலைக்கழகத்தின் ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, யோர்க் பல்கலைக்கழக ஹைட்ஸ் பகுதியின் அருகில் அமைந்துள்ள கீல் ஸ்ட்ரீட் மற்றும் கனார்ட்டிக் டிரைவ் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9:30 மணியளவில் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென எதிர்பாராத விதமாக, துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர். காயங்களுடன் இருந்த அந்த ஆண் நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர்.

இதை தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் இது, 2018 ஆண்டில் நகரத்தில் இடம்பெற்ற 82 வது கொலை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top