ராஜபக்ஷகளுடன் இணையமாட்டேன்! – சரத் பொன்சேகா

மஹிந்தவுடன் இணைந்து அரசியல் செய்வதை கனவில் கூட நினைத்துப் பார்க்கமாட்டேன் என்று அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“மஹிந்தவின் ஆட்சியை அன்று தொடக்கம் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர தோழனும் இல்லை என்று தெரிவித்தாலும், ராஜபக்ஸர்களின் ஊழல் அரசியலுடன் இணைந்து செயற்படமாட்டேன்.
தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு, போதை வர்த்தகர்கள், குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்த போது, எவரும் கவனத்திற்கொள்ளாவிட்டாலும், இன்று அவை உண்மையாகி வருவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் பொன்சேகா தெரிவித்தார்.