ரொறன்ரோவிற்கு அருகே கத்திக்குத்து தாக்குதல்

ரொறன்ரோவிற்கு அருகே Emery பகுதியில் இருவர் கத்தி குத்துக்கு இலக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐன்லிங்டன் அவென்யூவின் கிழக்கே, ஃபின்ச் அவென்யூ மற்றும் அர்ட்விக் பவுல்வர்ட் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு சென்ற போது பாதிக்கப்பட்டவர்களில் 20 வயதுடைய இளைஞன் கடுமையான காயங்களுக்கு ஆளான நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் மற்றுமொருவருக்கு சிறு காயங்களே ஏற்பட்டதாகவும், சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே சிகிச்சை வழங்கபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடாத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.