ரொறன்ரோவில் டிராம்வண்டியில் சிக்குண்ட பாதசாரி நேர்ந்த விபரீதம்!

ரொறன்ரோவின் மேற்கு பகுதியில் டிராம்வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகி ஆபத்தானநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் குயின்ஸ்வே மற்றும் எல்லிஸ் அவென்யூ பகுதியில் கடந்தவாரம் திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் கிழக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரொறன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான டிராம்வண்டியில் மோதுண்ட குறித்த பாதசாரி, அதன்கீழே சிக்கிக்கொண்டதாகவும், அதிகாரிகளால் மீட்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தானநிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் குறித்த 50 வயது மதிக்கத்தக்க அந்தநபர், நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.