Canada

ரொறன்ரோ பகுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு: ஆண் ஒருவர் படுகாயம்!

ரொறன்ரோ பகுதியின் லிடோனியாவில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, Eglinton Avenue மற்றும் Dufferin Street பகுதியில், Ennerdale வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று, குறித்த அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற இரண்டு நபர்கள், அஙகிருந்த ஆண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், 32 வயது நபரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரொறன்ரோ பொலிஸார்,.துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட 32 வயது ஆண் நபர் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரொறன்ரோ பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

To Top