News

லண்டனில் பொலிசார் மீது கொலைவெறித் தாக்குதல்: மர்ம நபர் வெறிச்செயல் !

லண்டனின் பார்னெட் பகுதியில் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொலிசார் மீது நபர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகராம் தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது கொலை முயற்சிக்கு வழக்குப் பதிந்துள்ளனர்.

பார்னெட் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் இருவர் விசாரணைக்கு சென்றுள்ளனர்.

மாலை 5 மணியளவில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிசாரிடம், பொதுமக்களில் ஒருவர் அணுகி, சந்தேக நபர் ஒருவர் கையில் ஸ்க்ரூடிரைவருடன் அப்பகுதியில் திரிவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குறித்த நபருடன் பேச்சுவார்த்தைக்கு முயன்றுள்ளனர்.

ஆனால் திடீரென்று அவர் கையில் இருந்த ஸ்க்ரூடிரைவரை பயன்படுத்து பொலிசார் ஒருவரின் தலையில் தாக்கியுள்ளார்.

இன்னொருவரின் கையில் பலமாக குத்தியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை வட்டமிட்டு கைது செய்த பொலிசார், மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனிடையே ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு காயமடைந்த பொலிசாரை மீட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு 29 வயது இருக்கலாம் எனவும், விசாரணைக்கு பின்னரே அவர் பொலிசாரை தாக்கிய காரணம் தொடர்பில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top