Canada

வின்னிபெக் பகுதியில் ஆயுத முனையில் கொள்ளை: இரு இளைஞர்கள் கைது!

வின்னிபெக் பகுதியில் ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர்டேஜ் அவென்யூ மற்றும் வான் ஸ்ட்ரீட். பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 2 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றபோது அங்கிருந்து இரண்டு பேர் தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இரு இளைஞர்களும் 16 வயது இளைஞனை ஆயுத முனையில் மிரட்டி மிளகு தூவி கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top