வில்லோடேவில் வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!

வில்லோடேவில் வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளதாகவும், விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு மற்றும் டோரிஸ் அவென்யூ பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் நடத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் வில்லோடேவில் இளைஞன் மீது விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்தில் நிற்கவில்லை என்றும், வெள்ளி அல்லது சாம்பல் நிற Toyota Yaris வகை காரே விபத்தை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற வீதியினை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.