Canada

ஹமில்ட்டனில் இனந்தெரியாதவர்களால் சிறுமிக்கு ஏற்பட்டயிருந்த விபரீதம்!

ஹமில்ட்டன் பகுதியில் சிறுமி ஒருவரை இனந்தெரியாத ஆண் ஒருவர் வாகனத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை காலை 8.45 அளவில், ஹமில்ட்டனின் Red Hill பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது Albright வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுமியை, இனந்தெரியாத அந்த நபர் தனது வாகனத்தினுள் ஏற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

தனது வாகனத்தினுள் ஏறினால் இனிப்பு பண்டம் ஒன்றைத் தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை அவர் வாகனத்தினுள் ஏற்ற முயன்ற போதிலும், சிறுமி அதனை மறுத்துவிட்டு பாடசாலைக்குள் ஓடிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top