Canada

ஹலிஃபெக்ஸ்ஸில் புகைத்தலுக்கு தடை; மீறினால் அபராதம்!

ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீறினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, கனடாவில் நோவா ஸ்கொட்ஷியாவின் தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் விடுக்கப்பட்டுள்ளது.

மீறினால் 25 டொலர்களில் இருந்து 2,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த தடையின் மூலம் சுகாதாரமான சூழல், ஆரோக்கியமான வாழ்வு சிறந்த எதிர்காலம் என ஏராளமான நன்மைகள் கிட்டும் என இது குறித்து, நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக புகைக்கும் பழக்கத்தை உடையவர்கள் நகரில் புகைப்பதற்கு என்று 30 இடங்களில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.Halifax _smoking ban

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top