Canada

26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது!

26-வயது பெண்ணை கொடூரமாக முறையில் கொலை செய்த குற்றத்திற்காக, நோவா ஸ்கோடியா பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, தென் கிளென்கெர்ரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரங்கேறியுள்ளது.

இதையடுத்து, கிடைக்கப்பெற்ற தகவலின் படி கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, 26 வயதான எமிலீ மஹூவின் உடலை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் கண்டெடுத்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் அடிப்படையில் தற்போது, 25 வயதான பிராண்டன் ஸ்மால்டெர் நியூ பிரன்ஸ்விக் பகுதியில் வைத்து ஒன்ராறியோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top