Canada

48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது!

மத்திய ஆல்பர்ட்டா பகுதியில் 48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது, கனடாவின் மத்திய ஆல்பர்ட்டா பகுதியில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் பொது மக்களின் அவசர உதவியை கேட்டார் இது குறித்த தகவலை பொலிஸார் வியாழக்கிழமை வெளியிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 47-வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் எவ்வித தகவல்களையும் இது வரை வெளியிடவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top