News

5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம்விக்கியை முதலமைச்சராக்கியது- மாவை

சி.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் தான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டானில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் செய்த பாவம் நீதியரசர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் ஜந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். காரசாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விக்னேஸ்வரன் கண்டிக்கின்றார். நாங்கள் விரைவில் வருவோம்.

நாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம். சிறிது காலத்தில் அவர் பற்றிய விடயங்களையும் அரசியல் விடயங்களையும் ஒழுங்காக சொல்லுவோம். கொஞ்சநாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையானது அல்ல. அதில் சில இணக்கமானவைகள் இருக்கின்றன. இணங்க முடியாதவைகள் அதில் திருத்தி அமைக்க வேண்டும். இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும்.

அதனை அரசியல் அமைப்புக்கு பொறுத்தமானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.

அந்த விடயத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த ஜந்து ஆண்டுகள் வரைக்கும் அல்ல இந்த ஆண்டுக்குள் அரசியல் அமைப்பு விடயம், நிலங்கள் விடுவிப்பது, கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

நிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது. நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம். நிலம் வேண்டும் அந்த நிலத்தில்தான் எங்களுக்கு ஆளுகின்ற உரிமை இருக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top