
ஒட்டாவா– ஆர்லிங்ரன் வூட்ஸ். இடுப்பு மாற்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ருத் கம்பெல் என்ற 84வயது முதியவரின் வீடு சூறாவளியால் சிதைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வைத்தியசாலையில் இருந்த காரணத்தால் இவர் காப்பாற்ற பட்டுள்ளார்.

இவரது நிலத்தில் இருந்த முதிர்ந்த பைன் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இவற்றில் ஒன்று இவரது நான்கு படுக்கை அறைகளை கொண்ட வீட்டை இரண்டாக பிளந்துள்ளது. மற்றொரு மரம் வீட்டின் பக்கங்களை சிதைத்துள்ளது.
தளபாடங்கள் சரிந்து ஒன்றின் மேல் ஒன்றாய் விழுந்துள்ளது.

இச்சமயத்தில் றுத்தும் வீட்டில் இருந்திருந்தால் அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என இவரது மகள் தெரிவித்துள்ளார். சமையலறை மேசையில்-தாயார் ஒவ்வொரு இரவிலும் இருக்கை போடப்பட்டிருந்த-மரமொன்று சரிந்துள்ளதெனவும் கூறினார்.
சிதைக்கப்பட்ட வீடு அழிக்கப்பட்டு டிசம்பர் 2019ல் மீள குடிபுக கூடியதாக அமையும் என கருதப்படுகின்றது.