Canada

கனடாவில் கோர விபத்து – இரு பெண்கள் உட்பட மூவர் பலி – இருவர் ஆபத்தான நிலையில் !

கனடாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ Port Perry பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ரொரன்டோவுக்கு 80 கிலோ மீற்றருக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தை தொடர்ந்து அதிகாலை 1.15 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாகனத்தின் ஆண் சாரதி மற்றும் மற்றைய வாகனத்தில் இரண்டு பெண் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு ஆண் மற்றும் பெண் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top