News

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கருத்து வேறுபாடுஅரசாங்கம் மீது மக்களுக்கு வெறுப்பு ! அமைச்சர் மனோ கணேசன் .

#Mano Ganeshan#Maithripala Sirisena

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக அரசாங்கம் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி, அவர்கள் தவறான இடத்திற்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம் என இருவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பன்னிப்பிட்டிய, தெபானம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியை விட பிரதமர் அதிகாரம் கொண்டவராக இருப்பார். இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி ஒருவரையும் தெரிவு செய்ய தயாராக வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top