Business

நடுத்தெருவில் நிர்வாணமாக ரத்தம் சொட்டச்சொட்ட காதலியை தாக்கிய நபர்

பிரித்தானியாவில் பிரிந்து செல்ல முயன்ற மனைவியை நடுத்தெருவில் வைத்து ரத்தம் சொட்டச்சொட்ட, நிர்வாண இளைஞர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஜாக் புஷெல் (22) தன்னுடைய காதலியுடன் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

அதிகாலை 5 மணிக்கு திடீரென வீட்டினுள் வைத்து ஒரு குழந்தைக்கு தாயான ஜேட் கல்லஹரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் வலிதாங்க முடியாத ஜேட், ‘ஜூலி என்னை கொலை செய்ய போகிறான்’ என கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஒடிந்த வந்த பக்கத்து வீட்டு பெண், தலை முழுவதும் ரத்தத்துடன் தெருவில் ஓடிவந்த ஜேட்டை பார்த்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் வீட்டிலிருந்து நிர்வாணமாக தெருவில் ஓடிவந்த ஜாக், காதலியின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தங்கியுள்ளான். இதில் நிலைகுலைந்த ஜேட் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜாக்கையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Latest News

To Top