Canada

EpiPen சாதனங்கள் குறித்த கனடா சுகாதார பிரிவின் எச்சரிக்கை!

வெள்ளிக்கிழமை கனடா சுகாதார பிரிவு சிலEpiPen மற்றும் EpiPen Jr auto-injector சாதனங்கள் குறித்து எச்சரிக்கை செய்துள்ளது. இவைகள் தங்கள் தாங்கி குழாய்க்குள் இருந்து இலகுவாக வெளியேற முடியாதவைகளாக இருக்கலாம்- இதன் காரணமாக தாமதம் அல்லது அவரச சேவை சிகிச்சை தடை செய்யப்பட்டு நோயாளி இயலாமை நிலைமைக்கு தள்ளப் படலாம் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிறு எண்ணிக்கையான சாதனங்களில்,EpiPens லேபல்கள் தவறாக பயன் படுத்தப் பட்டிருப்பதால் தானாக செலுத்திகள்-auto-injectors தங்கள் கரியர் குழாய்களின் உள்ளே சிக்கி கொண்டு கடினமானதாக அல்லது செயற்படுத்த முடியாத நிலைமையை ஏற்படுத்தலாம் என Pfizer Canada தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

காலாவதி திகதிகள் ஏப்ரல் 2018 மற்றும் அக்டோபர் 2018ற்கு இடைப்பட்ட தயாரிப்புக்கள் பாதிக்கப்பட்டவை என கூறப்பட்டுள்ளது.

Pfizer இவற்றை மீள அழைக்க போவதில்லை என்பதால் அவசர நிலைமை ஒன்று ஏற்படுவதற்கு முன்பு அவைகள் அவற்றின் தாங்கிக்குள் இருந்து இலகுவாக நழுவ கூடியனவா என்பதை சரிபார்த்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு செயலிழப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் குறித்த அறிக்கை கனடாவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரியவரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top