Canada

Torontoவில் 79 -வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்தும் பாட்டி

 Toronto பகுதியை சேர்ந்த லின்டோ என்ற முதியவர் ஒருவர், தனது 79- வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதன் மூலம் படிப்பிற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை Toronto பகுதி மக்களிடையே அவர் நிரூபித்து காட்டியுள்ளார்.

கடந்த 50 வருடங்ககளாக கனடாவின் Toronto பகுதியில் வசித்து வரும் 79- வயது முதியவரான லின்டோ Jamaica-வை பிறப்பிடமான கொண்டவர்.

இவர், கடந்த நான்கு ஆண்டுகள் Toronto யோர்க் பல்கலைக்கழகத்தில் பாலினம் மற்றும் மகளிர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

இதையடுத்து, அவரின் ஆய்வு பணிகள் நிறைவடைத்ததையடுத்து, நேற்று வியாழக்கிழமை யோர்க்  பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top