News

அகதி மீது பயணிகள் விமானம் மோதி பெரும் விபத்து !

ரஷ்யாவின் Sheremetyevo சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதி சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் குறித்த இளைஞர் எப்படி நுழைந்தார் என்ற கேள்வி பாதுகாப்பு அதிகாரிகளை குழப்பி வருகிறது.

சொவ்வாய் அன்று மாலை தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள Sheremetyevo சர்வதேச விமான நிலையத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஏதென்ஸ் செல்லவிருக்கும் விமானம் மோதி குறித்த 26 வயது இளைஞர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய விமானம் நிறுத்தாமல் ஏதென்ஸ் சென்றுள்ளதாகவும், குறித்த விமானமனது ரஷ்யாவின் Aeroflot விமனா சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.

விமானம் மேலெழும்பும் நேரம் பலமாக மோதியது போன்று உணர்ந்ததாகவும், இருப்பினும் விமானத்தை தொடர்ந்து செலுத்தியதாகவும் விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞர் ஆர்மேனிய தேசத்தவர் எனவும், ஸ்பெயின் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாட்ரிட் நகரில் இருந்து ஆர்மேனியா செல்லும் வழியின் இணைப்பு விமானத்திற்காக மாஸ்கோவில் இறங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top