News

அலரி மாளிகையில் சம்பந்தனிடம் முக்கிய வாக்குறுதி கொடுத்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்ரமசிங்க, சம்பந்தனிடம் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகளின் போது, நாங்கள் ஆதரவளிக்கின்றோம். எனினும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை.

இந்நிலையில், அந்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க, “ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதி” என கூறியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது, அரசியல் தீர்வு, விழிப்புணர்வு குழுவின் அறிக்கை, ஐநாவின் திட்ட வரைவு, அரசியல் கைதிகளின் விவகாரம், காணி விடுவிப்பு, இராணுவம் மேலதிகமாக கைப்பற்றியுள்ள காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஹர்ச டி சில்வா, அகில விராஜ் காரியவசம், மங்கள சமரவீர், சஜித் பிரேமதாச, ரவி கருநாணாயக்க, மலிக் சமர விக்ரம, சாகல ரட்நாயக்க, அஜித் பெரேரா, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கலந்துகொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top