Canada

எட்மன்டனில் பாலியல் சேவை செய்து வந்த 19 பேர் கைது!

எட்மன்டன் பகுதியில் பாலியல் சேவை செய்து வந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்டி ப்ரேரி றோயல் கனேடியன் மாவுண்ட் பொலிஸார் கூறியுள்ளனர் .

குறித்த சம்பவம் தொடர்பாக, கனேடியன் மாவுண்ட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பல நாட்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட 19 பேரும் 23 முதல் 69 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மீது 34 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும், அவர்கள் கூறியுள்ளனர் .

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top