Canada

எட்மன்டனில் மூன்று தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

எட்மன்டன் பகுதியில் லெட்யு பணியிட விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தானது, எட்மன்டன் பகுதியில்அமைந்துள்ள Leduc Business Park, அருகில் வியாழக்கிழமை மாலை 2:30 மணியளவில் நிகந்துள்ளது.

குறித்த சம்பவமானது, cryogenic ஷாட் வெடித்தல் மற்றும் cryogenic குழாய் முடக்கம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ளதாக லெட்யு மேயர் பாப் யங் தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, லெட் சூ சிட்டி கவுன்சில் மற்றும் நிர்வாகத்தின் சார்பாக, இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சக ஊழியர்களுக்கும் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என்று அந்நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ,இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top