News

எட்மன்டன் நகரில் பணப்பைகள் திருட்டு: இருவர் கைது

கனடாவின் எட்மன்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் பணப்பைகளை திருடியமைக்காக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவர் மீதும் 50 குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எட்மன்டனில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டபோது தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

இருப்பினும் கடைக்காரரின் கவனத்தை திசைதிருப்பிய திருடர்கள் அங்கு வந்தவர்களின் பணப்பைகளை திருடி, அதில் இருந்த கடன் அட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்.

அதன்படி கடந்த 2ஆம் திகதி, கால்கரி டிரெயில் மற்றும் 48 அவென்யூ பகுதியிலுள்ள மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் 75 வயதுடைய பெண் ஒருவரின் பணப்பை திருடப்பட்டு, கடன் அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

இந்த குற்றத்திற்காக 49 வயதுடைய மற்றும் 48 வயதுடைய இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்ததுடன், இந்த குற்றச்சாட்டு உட்பட மே – ஒக்டோபர் மாதத்தில் 49 திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதிலும் 49 வயதுடையவர் மீது ஜனவரியில் இருந்து மே மாதம் வரை 61 திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக எட்மன்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top