News

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவில்லை! – எம்.ஏ.சுமந்திரன்.

நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவில்லை. நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவே செயற்படுகின்றோம்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கோடிகோடியாகப் பணத்தைக் கொடுத்து ஆள்களை மாற்றுபவர்கள் நாம் என்னத்தைக் கேட்டாலும் தருவதாகச் சொல்வார்கள். எழுத்துமூலம் கேட்டாலும் அதற்கு ஒத்திசைந்து எழுத்தில் தருவார்கள். ஆனால், போலியான அவர்களின் எழுத்துமூல உறுதியை வேண்டி நாங்கள் ஏமாறத் தயாரில்லை. – என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top