Canada

ஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றம்; முதல்வர் தகவல்!

ஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக முதல்வர் டக் போர்ட் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பினை, ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் அலுவலகம் திங்கட்கிழமை காலை வெளியிட்டுள்ளது.

அதில், ஒன்ராறியோவின் மாகாண அரசாங்கம் பதவியேற்று 129 நாட்களே ஆன நிலையிலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அமைச்சரவையில் புதிய மாற்றம் என்பதனைத் தவிர வேறு எந்த விபரங்களையும்அந்த அலுவலகம் வெளியிடவில்லை.

மேலும், அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் தமிழ் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top