Canada

ஒன்ராறியோ ஏரியில் இறந்த மனித உடல் மீட்பு!

ஒன்ராறியோ ஏரி கடற்கரையின் கார் ஒன்றில் இருந்து இறந்த மனித உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், ஒன்ராறியோ ஏரி கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை காலை கார் ஒன்று கரை அருகே நொறுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த ஒன்ராறியோ பொலிஸார் இறந்த நிலையில் காணப்பட்ட மனித உடலை மீட்டு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கார் ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டை இழந்ததில் பயணி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பாக எந்த விதமான அறிவிப்பையில் பொலிஸார் வெளியிடவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top