Canada

ஒன்ராறியோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு

ஒன்ராறியோவிலுள்ள கிங்ஸ்டன் பொது மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் ஒரு சிறைக்கைதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது, ஒன்ராறியோவிலுள்ள கிங்ஸ்டன் பொது வைத்தியசாலையின் அவசர பிரிவில் நேற்று (திங்கட்கிழமை) அரங்கேறியுள்ளது.

சம்பவத்தில், பாத் நகரிலுள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி, மருத்துவ சிகிச்சைக்காக நேற்று கிங்கஸ்டன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பாதுகாப்பு அதிகாரிக்கும் கைதிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை பிடுங்கி குறித்த கைதி இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த உரிய நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகைத் தந்தவராவார். அவர் துப்பாக்கிச்சூட்டில் இலக்கான போதிலும் அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top