Canada

கனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் கடுமையான புயல்!

கனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் வீசிவரும் கடுமையான புயல்காற்று காரணமாக, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இருளில் மூழ்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அட்லான்டிக் பிராந்தியத்தில் கடுமையான புயல் காரணமாக இருள் சூழ்ந்து குளிரான காலநிலை நீடித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, கனடாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் 13 ஆயிரத்து 881 பயனாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில் சில பகுதிகளுக்கான மின் இணைப்புகள் நேற்று இரவு சரிசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அதேவேளை பல இடங்களுக்கான மின் இணைப்பு தொடர்ந்து இன்றும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த புயல் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் சில பிராந்தியங்களின் வெப்பநிலையானது -22 டிக்ரி செல்சியசாக குறையும் நிலை காணப்படுவதாகவும் சுற்றுச்சூழல் கனடா அமைப்பு வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top