Canada

கனடாவில் இருளில் மூழ்கிய குளிரான காலநிலை நீடிப்பு!

கனடாவில் அட்லான்டிக் பிராந்தியத்தில் கடுமையான புயல் காரணமாக இருள் சூழ்ந்து குளிருடன் கூடிய அசாதாரண காலநிலை நீடித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அட்லான்டிக் பிராந்தியத்தில் கடுமையான புயல் காரணமாக மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்றும் வீசி வருகின்றது.

இதேவேளை, நியூஃபவுண்ட்லண்ட் பகுதியில் 130 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் தெளிவற்ற வானிலை காணப்படுவதால், கவனமாக வாகனம் செலுத்துமாறு அந்த பகுதி வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல இடங்களுக்கான மின் இணைப்பு தொடர்ந்து இன்றும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

இதேவேளை, அட்லான்டிக் பிராந்தியத்தில் கடந்த சில தினங்களாக வீசிய புயல்காற்றின் எதிரொலியாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இருளில் மூழ்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top