Canada

கனடாவில் சட்டவிரோத கஞ்சா விற்பனை கடைகளில் பொலிஸார் சோதனை!

ஒட்டாவாவில் சட்டவிரோத கஞ்சா விற்பனை தொடர்பாக தேடுதல் உத்தரவுக்கு அமைய இரண்டு கடைகளில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கனடா அண்மையில் வெளியிட்டது.இதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத விற்பனைகளை தடுக்க பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் போதைப்பொருள் பிரிவு ஒட்டாவா பொலிஸார் இரண்டு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், சட்டவிரோத கஞ்சா பொருட்கள் மற்றும் அதனால் கிடைக்கப்பெற்ற வருமானம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த விற்பனையில் தொடர்புடைய மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top