Canada

கனடாவில் தஞ்சம் புகுந்த பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண்!

தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீபி என்பவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவராவார். இவர் இஸ்லாம் மதத்தை அவமதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதையடுத்து, பாகிஸ்தான் நீதிமன்றம் ஆசியாவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த ஆசியா 8 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

இதையடுத்து, தொடர்ந்த மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதற்கு எதிர்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம் நடந்தது.

எனவே, இங்கிலாந்து, கனடா, இத்தாலி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆசியா பீபீயின் கணவர் ஆசிக்மாசிக் இருப்பிடம் வேண்டி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பாரீசில் நடந்த முதல் உலகப்போர் 100 ஆண்டு நிறைவு விழாவில் கனடா பிரதமர் கலந்துகொண்டார். அவரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறினார்.

அதேநேரத்தில் கனடா மக்கள் அவர்களை வரவேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் ஆசியா பீபியும் அவரது குடும்பத்தினரும் கனடாவில் தஞ்சம் அடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top